யுக்ரைன்: ரஷ்யா ஆதரவு பெற்ற போராளி குழுவின் தளபதி கொல்லப்பட்டதற்கு அதிபர் மீது குற்றச்சாட்டு

கிழக்கு யுக்ரைனில் ரஷ்யா ஆதரவு பெற்ற ஒரு முன்னணி போராளி குழுவின் தளபதி படுகொலை செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து, தளபதியின் தோழர்களில் ஒருவர் யுக்ரைன் அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டொன்யட்ஸ்க் மக்கள் குடியரசு கட்சி என்று தன்னைத் தானே விவரித்துக்கொள்ளும் கட்சியின் தலைவர் அலெக்ஸாண்டர் ஸகர்சென்கோ

யுக்ரைன் அதிபர் பேரோஷென்கோ போர் நிறுத்தத்தை மீறி போர் அறிவித்ததாக , டொன்யட்ஸ்க் மக்கள் குடியரசு கட்சி என்று தன்னைத் தானே விவரித்துக்கொள்ளும் கட்சியின் தலைவர் அலெக்ஸாண்டர் ஸகர்சென்கோ தெரிவித்துள்ளார்.

டொன்யட்ஸ்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடைய அறைக்கு செல்ல லிஃப்டில் சென்ற போது ஒரு வெடிகுண்டு வெடித்ததில் மோடோரோலா என்று நன்கு அறியப்பட்ட அர்சென் பாவ்லோவ் பலியானார்.

தொடர்புடைய தலைப்புகள்