தெற்கு இத்தாலியில் கடந்த ஆண்டு 4.5 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்ந்ததாக தொண்டு நிறுவனம் தகவல்

இத்தாலியில் கடந்த ஆண்டு சுமார் 4.5 மில்லியனுக்கும் மேலானோர் முழுமையான வறுமையில் வாழ்ந்ததாக அந்நாட்டு தொண்டு நிறுவனமான காரிட்டாஸ் எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தெற்கு இத்தாலியில் கடந்த ஆண்டு 4.5 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்ந்ததாக தொண்டு நிறுவனம் தகவல்

இது எண்ணிக்கை கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து மிகவும் அதிகமானதாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

முதல் முறையாக, வெளிநாட்டினரைவிட சொந்த வம்சாவளி இத்தாலியர்களே நிவாரணம் தேடி அதிகளவில் வந்திருப்பதாக ரோமன் கத்தோலிக்க தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான உதவி மையங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு வலியுறுத்துகிறது.

அந்த தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் இத்தாலிய குடிமக்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

வட இத்தாலியில் இந்த விகிதாச்சாரமானது இதற்கு நேர் எதிராக உள்ளது.

வேலையில்லாத இளம்வயதினர் இதில் அதிகம் இருக்கிறார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்