தாய்லாந்தில் துக்கம் அனுசரிக்காத மக்களை தாக்கும் பொதுமக்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

தாய்லாந்தில், அரசரின் இறப்பிற்கு தகுந்த துக்கம் அனுசரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டு பெரிய கும்பல்களால், தனிநபர்கள் தாக்கப்படும் பல சம்பவங்களை தொடர்ந்து, மக்களை அமைதி காக்கும்படி அங்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சமுயி தீவில், பெண் ஒருவர் அரசரை அவமதிப்பதாக கருதப்படும் கருத்தை முகநூலில் பதிவிட்டதையடுத்து, அவருக்கு எதிராக கேலிக் கூச்சலிட்ட நிலையில் ஒரு கும்பல் , காலமான அரசரின் புகைப்படத்திற்கு முன் அவரை மண்டியிடக் கட்டாயப்படுத்தியுள்ளார்.

கருப்போ அல்லது வெள்ளை நிறத்திலோ, சிலர் புதிய ஆடைகளை வாங்க முடியாதவர்களாக இருக்கலாம் எனவே துக்கம் அனுசரிக்கும் நிறங்களில் ஆடைகளை அணியாத மக்களை தவறாக எண்ண வேண்டாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.