அலெப்போவில் தாக்குதலில் சிறிய இடைநிறுத்தம்- ரஷ்யா அறிவிப்பு

சிரியா நகரான அலெப்போவில் தான் நடத்திவரும் குண்டுத் தாக்குதலில் ஒரு `` சிறிய மனித நேய இடை நிறுத்தத்தை`` ரஷ்யா அறிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை KARAM AL-MASRI/AFP/Getty Images)

அலெப்போவில் குண்டுத் தாக்குதல் நடவடிக்கைகளை வியாழனன்று 8 மணி நேரத்துக்கு நிறுத்திவைப்பதாக ரஷ்யா கூறியிருக்கிறது.

இந்த சிறிய இடைநிறுத்தம் பொதுமக்களும், கிளர்ச்சியாளர்களும் நகரைவிட்டு வெளியேற உதவும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

ரஷ்யா, கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு அலெப்போவில் நட்த்திய தாக்குதல்களுக்காக மேலை நாடுகளிடமிருந்து விமர்சனத்துக்குள்ளானது. ரஷ்யா போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதாக அமெரிக்காவும் பிற முக்கிய அரசியல் பிரமுகர்களும் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.