காங்கோ ஜனநாயக குடியரசுக்குத் தப்பிச் சென்ற தென் சூடானின் முன்னாள் துணை அதிபர் நாடு திரும்புவதாக அறிவிப்பு

மூன்று மாதங்களுக்கு முன்பு, காங்கோ ஜனநாயக குடியரசுக்குத் தப்பிச் சென்றதெற்கு சூடானின் முன்னாள் துணை அதிபர் ரெய்க் மச்சார், நாடு திரும்பப் போவதாகக் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ரெய்க் மச்சார்(இடது) மற்றும் அதிபர் சல்வா கிர்ரும் ஆளும் அதிகாரத்திற்காக சண்டையிட்டு வருகின்றனர்.

தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், காயமடையவில்லை என்றும் பிபிசியிடம் தெரிவித்த மாச்சார், நாட்டின் பாதியளவு பகுதிகள், தனது இனக் குழுவான நுவர் குழுவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினார்.

மாச்சரின் நுவர் இனக் குழு மற்றும் அவரின் எதிராளியான அதிபர் சல்வா கிர்ரின் டின்கா படைகளுக்கிடையே நடக்கும் சண்டையில், நாடு பிளவுபட்டுள்ளது.

மேலும், இரண்டு மில்லியன் தென் சூடானியர்கள் , தங்களது வீடுகளில் இருந்து வெளியேறிவிட்டனர்.

ஆனால், போரின் தீவிரத்தன்மையை அதிகரிக்கத் தான் அழைப்பு விடுத்ததாக எழுந்துள்ள கூற்றுகளை மாச்சார் மறுத்துள்ளார்.

அதிபர் கிர், சொன்ன சொல்லைக் காப்பாற்றினால், இருவரும் ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று கூறியுள்ளார்.