காங்கோவில் கம்பளிப்பூச்சி வரி சர்ச்சையில் ஏற்பட்ட மோதலில் 16 பேர் பலி

காங்கோ ஜனநாயக குடியரசின் தென்கிழக்கு பகுதியில், சர்ச்சைக்குரிய கம்பளிப்பூச்சி வரி விவகாரத்தில் இரு இனத்தவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கம்பளிப்பூச்சிகள் கபலோ பிராந்தியத்தின் நிலையான உணவு

கம்பளிப்பூச்சிகள் கபலோ பிராந்தியத்தின் நிலையான உணவாகும்; பாட்வா அல்லது பிக்மிஸ் என்று அழைக்கப்படும் அமைப்பு, கம்பளிபூச்சிகளுக்கான விற்பனை வரியை செலுத்த மறுத்ததால் அங்கு பல நாட்களுக்கு முன் வன்முறை போராட்டம் தொடங்கியது.

சட்டவிரோத வரிகளை விதிப்பதாகவும், கம்புளிப்பூச்சி விற்பனையாளர்களை அடிப்பதாகவும் குற்றம் சுமத்தி லுபா இன குழுவைச் சேர்ந்த பலரை பாட்வா அமைப்பினர் கொன்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கு பழிவாங்கும் தாக்குதலை லுபா நடத்தி பிக்மிஸ் இனத்தைச் சேர்ந்த குறைந்தது 13 பேரை கொன்றனர்.

கடந்த சில வருடங்களாக இந்த இரு அமைப்புகளும் பல முறை மோதல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்