மொசூலில் போரிடுவோர் மனிதநேயத்தை வெளிகாட்ட செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்

இராக்கின் மொசூல் நகரில் போரிட்டு வருகின்ற அனைத்து தரப்பினரும், அவர்களின் மனிதநேயத்தை காட்ட வேண்டுமென்று செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அடுத்த இரண்டு வாரங்களில் 2 லட்சம் பேர் மொசூலை விட்டு வெளியேறுவர் என்று ஐநா நம்புகிறது

இந்த நகரத்தில் இருக்கும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை, இராக் அரசு படையும் அதன் கூட்டணிப் படைகளும் நெருங்கி வருகின்ற வேளையில், அங்கு சிக்கியுள்ள ஒரு மில்லியன் குடிமக்கள் பற்றி அதிகரித்து வரும் கவலைகளின் மத்தியில் இந்த வேண்டுகோள் வந்துள்ளது.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் உள்ளூர் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தலாம் அல்லது இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தலாம் என்று உதவி நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

முன்னேறி வருகின்ற பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் அடங்கியுள்ள இராக் அரச படைப்பரிவுகள், பெரும்பாலும் சுன்னி முஸ்லிம்கள் வாழ்கின்ற மொசூலை பழிவாங்க இந்த தருணத்தை பயன்படுத்தலாம் என்றும் கவலைகள் நிலவுகின்றன.

இரண்டாவது நாளாக போர் நடைபெற்று வருகின்ற நிலையில் இராக் அரசுப் படைப்பிரிவுகள் அந்நகரின் தெற்கிலுள்ள 10 கிராமங்களை கைப்பற்றி இருப்பதாக தெரிவித்திருக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்