சாட்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த காங்கோவின் முன்னாள் துணை அதிபர்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், காங்கோவின் முன்னாள் துணை அதிபர் ஷான் பியர் பெம்பா, போர் குற்றம் புரிந்த வழக்கு விசாரணையில், சாட்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஷான் பியர் பெம்பா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல்முறையாக இம்மாதிரியான வழக்கை சந்தித்துள்ளது.

பெம்பா மற்றும் அவரின் நான்கு கூட்டாளிகள் சாட்சியாளர்களுக்கு பணம் மற்றும் பல சலுகைகள் தர முன்வந்தனர் என்றும், அவர்களுக்கு என்ன பேச வேண்டும் என்பதும் பயிற்றுவிக்கப்பட்டன என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

நேரடியான குற்றவியல் நடத்தை என்று நீதிபதிகளால் அழைக்கப்பட்ட அந்த குற்றத்தால் விசாரணைகள் தடைபட அனுமதிக்கமாட்டோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பெம்பாவின் ஆயுதக்குழுவினர் மத்திய ஆப்ரிக்க குடியரசில் புரிந்த போர் குற்றங்களுக்காக, ஜூன் மாதம் பெர்மாவிற்கு 18 வருட கால சிறைதண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.