நாகரீக வளர்ச்சியின் கடைசி நிகழ்வுதான் செயற்கை அறிவு வளர்ச்சி: ஸ்டீஃபன் ஹாகிங்

பிரிட்டனின் விண்ணியல் நிபுணர் ஸ்டீஃபன் ஹாக்கிங், செயற்கை அறிவு வளர்ச்சிதான் அனைத்திலும் பெரியதாகவும், நாகரீக வளர்ச்சியின் வரலாற்றில் நடைபெறும் கடைசி நிகழ்வாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ``செயற்கை அறிவு வளர்ச்சிதான் அனைத்திலும் பெரியதாகவும், நாகரீக வளர்ச்சியின் வரலாற்றில் நடைபெறும் கடைசி நிகழ்வாகவும் இருக்கும் ``- ஹாக்கிங்

பருவ நிலை மாற்றம் போன்ற பிரச்சனையை எதிர்கொள்ளவும் அல்லது நோய் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கும் செயற்கை அறிவு பயன்படும் என பேராசிரியார் ஹாகிங் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே சமயத்தில், அவை தானியங்கி ஆயுதங்களைக் கொண்டுவரலாம் என்றும், பொருளாதாரத்தில் சிக்கல்களை கொண்டுவரலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தானியங்கி கார்களுக்கான விதிகளை ஆராய்தல் மற்றும் ரோபோக்கள் முதியவர்களை கவனித்து கொள்ளக்கூடுமா போன்ற பிரச்சனைகளை ஆராய புதிய ஆய்வமைப்பு பிரிட்டனில் தொடங்கப்பட்ட நிலையில், இந்த எச்சரிக்கையை ஹாங்கிங் விடுத்துள்ளார்.