ஸ்பெயினில் மாடுகளை அடக்கிக் கொல்லும் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஸ்பெயினின் கடலோனிய பிரதேசத்தில் மாடுகளை அடக்கிக் கொல்லும் விளையாட்டுக்கு விதித்த தடை அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று கூறி அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று, அத்தடையை நீக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

இந்த மாட்டை அடக்கும் விளையாட்டை ஸ்பானிஷ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் இம்மாதிரியான முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும் அவை பகுதியளவு தன்னாட்சிக் கொண்ட பிராந்தியங்களால் எடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடோலினியா பிராந்தியத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இந்த விளையாட்டு ஒத்துப்போகவில்லை என்று கூறி கடாலோனியாவில் 2010 ஆம் ஆண்டு அது தடை செய்யப்பட்டது.

பாலியாரிக் தீவுகள், கேனரிஸ் மற்றும் ஸ்பெயினைச் சுற்றியுள்ள பல நகராட்சிகளில் உள்ள இம்மாதிரியான சட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.