மொசூல் நகரை கைப்பற்றும் முயற்சி திட்டமிட்டதைவிட வேகமாக நடக்கிறது: பிரதமர் கருத்து

இஸ்லாமிய அரசு என தம்மை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரை கைப்பற்றும் முயற்சிகள் திட்டமிட்டதைவிட வேகமாக நடந்து வருவதாக இராக் பிரதமர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி

மொசூல் நகரை நோக்கி படையினர் எதிர்பார்த்ததைவிட விரைவாக முன்னேறி வருவதாக இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி தெரிவித்துள்ளார்.

குர்தீஷ் போராளிகள் மொசூல் நகரிலிருந்து கிழக்கு மற்று வடக்கு பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து பிரதமரின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மொசூல் நகரை கைப்பற்றும் முயற்சி திட்டமிட்டதைவிட வேகமாக நடக்கிறது: பிரதமர் கருத்து

ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற அரசாங்க தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அவர்களுடன் இராக் சிறப்பு படையினரும் இணைந்துள்ளனர்.

அமெரிக்க தலைமையிலான கூட்டு படையினரின் உதவியோடு பர்டாலா நகரில் தனது படைகள் முன்னேறி உள்ளதாக இராக் தளபதி மான் அல்-சாடி தெரிவித்துள்ளார்.

இராக் அரசு படைகள் மற்றும் அதன் கூட்டணி படையினரும் மொசூல் நகரை நெருங்கி வருவதால், ஐ.எஸ் குழுவின் தலைவர்கள் மொசூல் நகரை விட்டு வெளியேறிவிட்டதற்கான தடயங்கள் இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்