துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பான விசாரணை: 40 படையினர் கைது

கடந்த ஜூலை மாதம் துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக, மத்திய துருக்கியில் கொன்யா நகரிலிருந்த ஒரு விமான தளத்திலிருந்து 40 படையினர்களை துருக்கி போலிசார் தடுத்து வைத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மொத்தம் 47 படையினருக்கு கைது உத்தரவு பிறக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா குலனின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களை அடையாளம் காண மூன்றாவது முறையாக இந்த விமான தளம் சோதனையிடப்பட்டுள்ளது.

தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு ஃபெத்துல்லா குலன் தான் காரணம் என்று துருக்கி அரசு குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால், துருக்கி அரசின் குற்றச்சாட்டுக்களை ஃபெத்துல்லா குலன் மறுத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்