ஏமன் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று ஐ.நா அதிகாரிகள் நம்பிக்கை

ஏமனில் இங்கும் அங்குமாக ஒரு சில பகுதிகளில் மோதல் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ள போதிலும், தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தமானது பெரியளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தோன்றுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹூதி போராளிகளின் வசமுள்ள ஏமன் தலைநகர் சனாவில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த 72 மணிநேரம் போர் நிறுத்தமானது நள்ளிரவு முதல் அமுலானது.

ஹூதி போராளிகளின் வசமுள்ள ஏமன் தலைநகர் சனாவில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால், அதிகாலை நேரத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையை போராளிகள் மீறியதாக அரசு படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வழிவகுக்கும் என்று போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தராக செயல்பட்ட ஐ.நா அதிகாரிகள் நம்புகின்றனர்.

18 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ஏமன் முழுக்க பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தீவிர ஊட்டசத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.