வட இராக்கின் கிர்க்குக் நகரில் தாக்குதலை ஆரம்பித்துள்ள ஐ.எஸ்

வட இராக் நகரமான கிர்க்குக்கின் உள்ளேயும், நகரை சுற்றியும் ஐ.எஸ் குழுவை சேர்ந்த போராளிகள் பல தாக்குதல்களை தொடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பல தற்கொலை குண்டுதாரிகள் தங்களை தாங்களே வெடிக்க வைக்க செய்துள்ளனர்.

இந்த நகரின் வடமேற்கே 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல தற்கொலை குண்டுதாரிகள் தங்களை தாங்களே வெடிக்க வைக்க செய்துள்ளனர்.

நகரின் உள்ளே ஐ.எஸ் போராளிகள் பல கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அதில், ஒரு அரசு கட்டிட வளாகமும், காவல்துறை தலைமையக கட்டிடமும் அடங்கும்.

குறைந்தது நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கிர்க்குக் நகரில் இங்கும் அங்குமாக துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டு வருகின்றன.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள வடபுல மொசூல் நகரை இராக் அரசாங்கம் மற்றும் குர்து படையினர் கூட்டாக இணைந்து மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்