இங்கிலாந்தின் எல்லை பின்தள்ளி குறிக்கப்பட பிரான்ஸின் அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளர் கருத்து

பிரிட்டனின் எல்லை, ஆங்கில கால்வாய்க்கு அப்பால், இங்கிலாந்தின் தென் பகுதிக்கு பின்தள்ளி குறிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸின் முன்னாள் பிரதமரும், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பருமான அலெங் யூப்பே தெரிவித்திருக்கிறார்,

படத்தின் காப்புரிமை AP
Image caption கலெயில் எல்லை சோதனை நடத்துவதற்கு பிரிட்டனை அனுமதித்த 2003 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை, மீண்டும் கலந்து பேச வேண்டும் - அலெங் யூப்பே

ஜங்கிள் முகாம் என்றழைக்கப்படும் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் மற்றும் அகதிகள், நெரிசலான சூழ்நிலையில் வாழ்கின்ற கலேயில், பிரிட்டனுக்குள் குடியேறவேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்களை நிர்வகிப்பதை பிரான்ஸ் நிறுத்த வேண்டுமென அவர் கூறியிருக்கிறார்.

கலெயில் எல்லை சோதனை நடத்துவதை அனுமதித்த 2003 ஆம் ஆண்டு ஒப்பந்தம், மீண்டும் கலந்து பேசி முடிவு செய்யப்பட வேண்டும் என்று யூப்பே கார்டியன் செய்தித்தாளுக்கு அறித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்