144 பேர் பலியான அபெர்வான் பேரழிவின் நினைவு நாளில் பிரிட்டனில் மௌன அஞ்சலி

116 பள்ளிக் குழந்தைகள் மற்றும் 28 வயதுவந்தோர் பலியான சௌத் வேல்ஸிலுள்ள அபெர்வான் பேரழிவின் 15-வது நினைவு நாளை அடையாளப்படுத்தும் வகையில் இன்று பிரிட்டன் முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பல நாட்கள் பெய்த கனமழையின் காரணமாக, அபெர்வான் கிராமத்தின் துவக்கப் பள்ளி மீது ஆயிரக்கணக்கான டன் நிலக்கரி கழிவுகள் சரிந்து விழுந்ததால் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.

Image caption மௌன அஞ்சலி செலுத்தும் பள்ளிக் குழந்தைகள்

அபெர்வான் கிராமத்தின் மேலே காணப்பட்ட நிலக்கரி முனையானது பாதுகாப்பில்லாதது என்று முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த பின்னரும், இந்த சம்பவத்திற்கு பிறகு, யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

Image caption அபெர்வானில் மீட்புப்பணியில் ஈடுபட்ட தந்தை தோண்டி எடுத்த கடிகாரத்துடன் மைக் ஃபிளைண். இது காலை 9: 13 மணிக்கு நின்றுள்ளது. இந்த பேரழிவு நிகழ்ந்த சரியான நேரத்தை குறிப்பதற்கு விசாரணையின்போது இது பயன்பட்டது.

இந்த சம்பவத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தி, பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்க, பட்டத்து இளவரசர் சார்லஸின் இந்த கிராமத்தை இன்று சந்திக்க இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்