செயற்கைக்கோளை உருவாக்கும் சீன பள்ளி மாணவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செயற்கைக்கோளை உருவாக்கும் சீன பள்ளி மாணவர்கள்

சீன விண்வெளிவீரர்கள் இரண்டுபேர் தற்போது சீனாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுக் கட்டமைப்பான தியாங்காங் டூ என்று அழைக்கப்படும் விண் ஆய்வு மையத்தில் பயணித்து பூமியைச் சுற்றி வருகிறார்கள்.

ஆனால் சீனாவோ தனது சாதனையில் மிதக்கவில்லை.

மாறாக அடுத்த தலைமுறை விண் ஆய்வு விஞ்ஞானிகளையும் பொறியியலாளர்களையும் உருவாக்குவதில் சீன அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.அதை செய்யும் பள்ளிகளில் ஒன்று பீஜிங் மத்திய பள்ளி.

இந்த பள்ளி மாணவர்கள் உருவாக்கவிருக்கும் செயற்கைக்கோள் உண்மையில் விண்ணில் ஏவப்படவிருக்கிறது.அந்த பள்ளிக்கு நேரில் சென்று பார்த்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.