மோசூல் சண்டையால் அவதிப்படும் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோசூல் சண்டையால் அவதிப்படும் மக்கள்

இராக்கின் வடபகுதி நகரான கெர்க்குக்கின் உள்ளேயும் வெளியேயும் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் போராளிகள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அரசாங்க கட்டிடங்களும் போலிஸ் தலைமையகமும் இலக்கு வைக்கப்பட்டன. மொசூல் நகரை மீளக்கைப்பற்றுவதற்கான இராக்கிய மற்றும் குர்து படைகளின் நடவடிக்கை வேகமாக முன்னேறும் நிலையில் இது நடந்துள்ளது.

மொசூல் நகர் மீது குர்து பெஷ்மேர்கா படையினர் தாக்குதல் நடத்தும் வடகிழக்கு பகுதியில் இருந்து இந்தக் காணொளி வருகிறது.

நகரில் இருந்து தப்பி வந்த அகதிகள் இங்கு முகாம்களில் தங்கியுள்ளனர். அங்கு எமது பிபிசி குழு சென்றிருந்தது.