இராக்கின் கிர்க்கூக் நகரில் ஐ.எஸ் தாக்குதல்களை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

இராக்கின் வடபுல நகரமான கிர்க்கூக்கில் ஐ.எஸ் குழுவை சேர்ந்த தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இராக்கின் கிர்க்கூக் நகரில் ஐ.எஸ் தாக்குதல்களை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

அரசாங்க கட்டிடங்கள் மற்றும் அந்நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்திருந்த மின் உற்பத்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற இராக் அரசாங்கம் மற்றும் குர்தீஷ் படையினர் மேற்கொண்டு முயற்சிகளிலிருந்து அவர்களை திசைத்திருப்ப ஐ.எஸ் குழுவினர் இதுபோன்ற துணிகர எதிர் தாக்குதலை நடத்தியிருப்பதாக வட இராக்கில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்