நச்சு வாயு தாக்குதலில் சிரியா அரசு படைகள் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

சிரியா அரசு படைகள் மூன்றாவது நச்சு வாயு தாக்குதல் ஒன்று நடத்தியிருப்பதை கண்டறிந்துள்ளதாக ஒரு சர்வதேச விசாரணை குழு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நச்சு வாயு தாக்குதலில் சிரியா அரசு படைகள் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இட்லிப் பகுதியிலிருந்த கமெனா கிராமம் நச்சு வாயு தாக்குதலுக்கு இலக்காக வைக்கப்பட்டதாக ஐ.நா மற்றும் சர்வதேச ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பகமான ஒ பி சி டபிள்யூ அளித்த அறிக்கைகள்கூறுகின்றன

சிரியாவின் ராணுவ தளத்திலிருந்து பறந்த ஹெலிகாப்டர்கள், தடை செய்யப்பட்ட ஆயுதமாக கருதப்படும் குளோரின் வாயு அடங்கிய பீப்பாய் குண்டுகளை வீசியதை கண்டறிந்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியாக வெளியான அறிக்கையில், மற்ற வேறு இரு குளோரின் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த சிரியா அரசாங்கத்தையும், சல்பர்-கடுகு வாயுவை பயன்படுத்தியதற்காக ஐ.எஸ் குழுவினரையும் இந்த அறிக்கை குற்றஞ்சாட்டியிருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்