அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவை காண அனுமதி கோரிய ரஷ்யாவின் மனு தள்ளுபடி

அமெரிக்காவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்று மாகாண தேர்தல்களை பார்வையிட அனுமதி கோரியிருந்த ரஷ்யாவின் கோரிக்கையை விளம்பர யுத்தி எனக்காக கூறி அமெரிக்க அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஓக்லஹோமா, டெக்சஸ் மற்றும் லூசியானா மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில், அமெரிக்காவின் அனுபவங்களை தெரிந்து கொள்ள வாக்கு நடைபெறும் இடத்தில் அதிகாரப்பூர்வமாக வருகைதர விரும்புவதாக ரஷ்ய தூதர் கேட்டிருந்தார்.

ஆனால், அனைத்து மாகாணங்களும் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளன.

வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளை தவிர்த்து பிறர் இருப்பதை மாகாண சட்டம் தடுக்கிறது என்று ஓக்லஹோமா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்