தீவிரவாத குழுக்களை தோற்கடிக்க முன்னாள் அமெரிக்க தளபதியின் புதிய மார்ஷல் திட்டம்

நீண்ட கால நோக்கில் ஐ.எஸ் அமைப்பை போன்ற குழுக்களை தோற்கடிக்க போரினால் சின்னாபின்னமான நாடுகளுக்கு நிதி ஆதரவு அடங்கிய புதிய மார்ஷல் திட்டம் ஒன்றை உருவாக்குவதே ஒரே வழியாக இருக்கும் என்று முன்னாள் மூத்த அமெரிக்க தளபதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னாள் மூத்த அமெரிக்க தளபதி ஜான் ஆலன்

மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை தான் நம்புவதாக ஜான் ஆலன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இராக் மற்றும் சிரியாவில் ராணுவம் வெற்றி பெற்றவுடன் அடுத்து என்ன நடைபெறும் என்பதை மேற்கத்திய நாடுகள் சிந்திக்க வேண்டும் என்று பிபிசியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் நல்வாழ்விற்காக ஆட்சி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒருமித்த முயற்சி வேண்டும் என்றும், அந்த நாடுகளின் குடிமக்கள் மீண்டும் தீவிர கொள்ளைகளை உடையவராக மாற்றப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்