சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: கனடா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே இழுபறி

ஏழு ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கனடாவோடு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமா என்பதை ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாககனடா வர்த்தக அமைச்சர் கிறைஸ்டியா ஃபிரிலான்ட் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption வலோனியாவின் எதிர்க்கட்சியை பால் மேக்னெட்தே (நடுவில்) வழிநடத்துகிறார்

இப்போது ஐரோப்பா முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது என்று ஐரோப்பிய நாடாளுமன்ற சபாநாயகர் மார்ட்டின் சூல்ஸூடன் இணைந்து பிரஸல்ஸில் பேசுகையில் தெரிவித்த பிரிலான்ட், சில நாட்களில், கனடா பிரதமருடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட தான் வர இருப்பதை இன்னும் நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஐரோப்பிய நகரங்களில சிஇடிஎ (Ceta) மற்றும் டிடிஐபி-க்கு (TTIP) எதிராக போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்

முன்மொழியப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை பெல்ஜியத்தின் தென் பிராந்திய வலோனியா அரசானது, தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் தரங்கள் ஆகியவற்றை காரணம் காட்டி நிறைவேறாமல் தடுத்துள்ள நிலையில் கடைசிகால விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

வலோனியா சோசலிச நிர்வாகத்தின் பிரிமியர் பால் மேக்னெட்டுடன் மார்ட்டின் சூல்ஸ் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்