அகதிகள், தஞ்சம் கோரிகளுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் பேரணி

அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோரை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியா முழுவதும் நடத்தப்பட்ட பேரணிகளில் 20 ஆயிரத்திற்கும் மேலானோர் பங்கேற்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நவ்ரு தீவிலுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களுக்கு எதிராக இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிட்னி நகரில் நடைபெற்ற ஒரு போராட்டம்

குடியேறிகளுக்கு எதிராக அதிகரித்து வருகின்ற பிரசாரங்களுக்கு எதிர் கருத்துக்களை முன்வைக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் 25 நகரங்களில் இந்த பேரணி நடைபெற்றிருப்பதாக, ஆஸ்திரேலியாவுக்கு வரவேற்கிறோம் என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

நவ்ரு தீவின் கடற்கரை தடுப்பு முகாம்களில் இருக்கின்ற 400-க்கு மேலான தஞ்சக்கோரிகளை, ஆஸ்திரேலிய அதிகாரிகள் மோசமாக நடத்தியிருப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு இந்த வாரம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனை மறுத்திருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், ஆஸ்திரேலிய கடற்கரையோரங்களை வந்தடைய முயற்சிக்கும்போது, தஞ்சக் கோரிக்கையாளர்கள் கடலில் மூழ்காமல் இருப்பதற்கு இந்த தடுப்பு முகாம்கள் அவசியமானவை என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்