கிழக்கு ஆப்கனில், ஐ..எஸ்சுக்கு எதிராக மூன்றாவது நாளாக தொடரும் தாக்குதல்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பினரோடு மூன்றாவது நாளாக உள்ளூர் போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர் என கிழக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

நாங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள தொலைதூரத்தில் உள்ள பாசிராகம் என்ற மாவட்டத்தில் நடந்த மோதலில் குறைந்தது 15 பொது மக்கள் கொல்லப்பட்டனர் என ஒரு உள்ளூர் முதியவர் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் அங்குள்ள குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்..

ஐ.எஸ்.படையினருக்கு எதிராக, தாலிபன் படையினர் உள்ளூர் போராளிகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது.

தீவிரவாதிகளை விரட்ட அந்தப் போராளிகளுக்கு உதவ ஆப்கன் அரசுப் படைகள் அங்கு வந்துள்ளன.

வெள்ளியன்று, அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், ஐ.எஸ்.படையைச் சேர்ந்த 40பேர் வரை கொல்லப்பட்டனர் என்று ஒரு மாவட்ட அதிகாரி கூறியுள்ளார்.