இராக் போரிட துருக்கியின் உதவி அவசியப்படவில்லை - ஹைதர் அல்-அபாதி

மொசூல் நகரில் நடைபெறும் போரில் துருக்கிய படைப்பிரிவுகள் ஈடுபடுவதற்கு எந்தவொரு அவசியமும் உருவாகவில்லை என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டரிடம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption இராக் அரசோடு இருக்கும் உறவை கெடுக்கும் விதமாக, இந்த போரில் தான் ஈடுபட வேண்டும் என துருக்கி வலியுறுத்தி வருகிறது

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை தோல்வியடைய செய்யும் நோக்கிலான இந்த போரின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய கார்டர் இராக் சென்றிருக்கிறார்.

குர்து இன பெஷ்மெர்கா ஆயுதப்படை மற்றும் அமெரிக்க தலைமையிலான சுட்டணி படைப்பிரிவுகளின் ஆதரவோடு, இராக் ராணுவத்தால் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

இராக் அரசோடு இருக்கும் உறவை கெடுக்கும் விதமாக, இந்த போரில் தான் ஈடுபட வேண்டும் என துருக்கி வலியுறுத்தி வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்