சிரியாவில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன

சிரியாவின் அலெப்போவில் ரஷியாவால் ஒரு மனதாக அறிவிக்கப்பட்ட மூன்று நாள் போர் நிறுத்தம் முடிவடைந்ததையடுத்து அங்கு கடுமையான சண்டை மற்றும் வான் தாக்குதல்கள் மீண்டும் துவங்கியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

எல்லைப்பகுதியை ஒட்டி, ஷேக் சயித் மற்றும் சலா எல் டீன் ஆகிய வற்றின் அண்டை பகுதிகள் உட்பட பல பகுதிகளில் மோதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடைபெற்றன.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சில பகுதிகளிலும் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என செய்திகள் தெரிவித்தாலும் அவை ரஷிய விமானங்களால் நடத்தப்பட்டவையா அல்லது சிரியா விமானங்களால் நடத்தப்பட்டவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என்பதால், போர் நிறுத்தத்தின் போது, கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் முற்றுகையிடப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்ற முடியவில்லை என ஐ.நா., தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று தாங்கள் கருதுபவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நாவின் பாதுகாப்பு முகமையை ஃபிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் விசாரணையின் முடிவுகளில், தடை விதிக்க போதிய ஆதாங்கள் கிட்டவில்லை என பாதுகாப்பு கவுன்சிலில் சிரியாவின் முக்கிய ஆதரவாளரான ரஷ்யா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்