சோமாலியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி நிலை வாக்குப்பதிவு தொடக்கம்

சோமாலியாவில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் சிக்கலான தேர்தல் முறையின் கடைசி நிலை தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

275 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய, மக்கள் தொகையில் 0.2 சதவீதத்திற்கும் குறைவான பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர்.

இறுதியில் சோமாலியர்கள் அனைவரும் வாக்களிக்கும் நிலையை உருவாக்குவதற்கான அடுத்த அடியாக இதை ஐ.நா., கருதுகிறது.

இது 2020ஆம் ஆண்டிற்குள் சாத்தியமாகும் எனவும் ஐ.நா., நம்புகிறது.

பல வருடங்களாக நடந்த உள்நாட்டு போரால் சோமாலியா பேரழிவிற்கு ஆளானது என்பதும் அடுத்த மாத இறுதியில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.