டைம் வார்னர் நிறுவனத்தை 85 பில்லியன் டாலர் கொடுத்து எடி&டி நிறுவனம் வாங்கவுள்ளது

அமெரிக்காவின் தொலைதொடர்பு நிறுவனம் ஏடி&டி, 85 பில்லியன் டாலருக்கு அதிகமாக செலுத்தி, திரைப்படம் மற்றும் ஊடக பெருநிறுவனமான டைம் வார்னரை வாங்கும் ஒப்பந்தம் ஒன்றிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த வருடத்தில் பெரியளவில் நடைபெறும் நிறுவன கையகப்படுத்துதல் இதுவே ஆகும்

இந்த வருடத்தில் பெரியளவில் நடைபெறும் நிறுவன கையகப்படுத்துதல் இதுவே ஆகும்.

கட்டுப்பாட்டாளர்களால் அனுமதிக்கப்பட்டால் புதிய கூட்டு நிறுவனம், ஏடி&டி யின் விநியோக நெட்வொர்க், டைம் வார்னரின் உரிமை நிறுவனங்களுடன் இணைக்கப்படும்; திரைப்பட ஸ்டுடியோ மற்றும் கேபிள் சேனல்களான எச்பிஒ மற்றும் சிஎன்என் ஆகியவை டைம் வார்னர் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகும்.

இது மிகப் பொருத்தமான கூட்டு என்று ஏடி&டி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மிக சிலரிடமே ஊடக அதிகாரம் குவிந்திருப்பதை இது பிரதிபலிக்கிறது என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் நடைபெறவிருக்கு அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இந்த ஒப்பந்தத்தை தடை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.