இராக்கில் மது விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

இராக்கில் மது விற்பனை, இறக்குமதி மற்றும் உற்பத்திக்கு தடைவிதிக்க நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இராக்கில் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மது கடைகள் மூடப்பட்டுள்ளன

அதற்கு ஆதரவளித்தவர்கள், இஸ்லாம் விதிகளுடன் முரண்படும் எந்த ஒரு சட்டத்தையும் தடைசெய்யும் நாட்டின் அரசியல் அமைப்பை சுட்டிக்காட்டி இம்முடிவை நியாயப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த தடை சிறுபான்மை மக்களான கிறித்துவர்களின், மத நம்பிக்கை சுதந்திரம், மற்றும் மத நடைமுறைகளுக்கான அரசியல் அமைப்பு உத்தரவாதங்களை மீறுவதாக உள்ளது என எதிர்தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தடை, நகராட்சிகளுக்கான வரைவு சட்டத்தில் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டது என ஏஎஃப்பி செய்தி முகமையிடம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடமிருந்து மொசூலை கைப்பற்றுவதில் நாடு கவனம் செலுத்தி வரும் வேளையில் இந்த சட்டம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.