60 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தொடர் போட்டிக்கு தகுதி பெற்ற 'தி சிகாகோ கப்ஸ்' பேஸ்பால் அணி

அமெரிக்க நகரமான சிகாகோவில் 1945க்குப் பிறகு முதல் முறையாக உலகப் போட்டிக்கு தி சிகாகோ கப்ஸ் என்ற பேஸ்பால் அணி தகுதி பெற்றதை தொடர்ந்து களிப்பூட்டும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தி சிகாகோ கப்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் அணியை கிகாகோ கப்ஸ் தோற்கடித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெற்றி களிப்பில் ரிக்லி மைதானத்தின் வெளியே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அடுத்த வாரம் நடைபெற உள்ள உலகப் போட்டியில் டென்வர் இந்தியன்ஸ் அணியை சிகாகோ கப்ஸ் எதிர்கொள்ள உள்ளனர்.

''கர்ஸ் ஆஃப் தி பில்லி கோட்'' எனப்படும் ஒரு துரதிர்ஷ்டமான சாபத்தை இறுதியாக சிக்காகோ கிளப்ஸ் கடந்து வெற்றி பெறுவார்கள் எனவும், 1908க்குப் பிறகு முதன் முறையாக மேஜர் லீக் பேஸ்பால் போட்டியில் முதல் பரிசை கைப்பற்றுவார்கள் எனவும் ரசிகர்கள் நம்புகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்