மொசூல் நகருக்கான போரை திசைதிருப்ப ருட்பா நகரம் மீது ஐ.எஸ் தாக்குதல்

மொசூல் நகரை கைப்பற்றுவதற்காக நடைபெற்று வரும் போரை திசை திருப்பும் வகையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் சமீபத்திய முயற்சியாக மேற்கு நகரமான ருட்பாவில் தாக்குதல் தொடுத்து வருவதாக இராக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மொசூல் நகருக்கான போரை திசைதிருப்ப ருட்பா நகரம் மீது ஐ.எஸ் தாக்குதல்

ஜிஹாதிகள் நகரின் உள்ளே நுழைந்துவிட்டதாகவும், பாதுகாப்பு படையினருடன் தீவிரமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு வருவதாகவும் மேற்கு மாகாணமான அன்பரில் உள்ள ருட்பா நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பிற்காக கூடுதல் படைகளை அனுப்ப அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகரமான மொசூலை மீண்டும் கைப்பற்ற நடந்து வரும் போரில் வட இராக்கில் உள்ள இராக் அரசு படையினரும் மற்றும் குர்தீஷ் படையினரும் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்