சோமாலியாவின் பெரிய ராணுவ தளத்திலிருந்து வெளியேறிய எத்தியோப்பிய படையினர்

சோமாலியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வரும் எத்தியோப்பிய படையினர், மத்திய பிராந்தியமான ஹிரானில் உள்ள பெரிய ராணுவ தளத்திலிருந்து வெளியேறி உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

எத்தியோப்பிய துருப்புகள் வெளியேறிய உடன் ஜிஹாதிகள் குழுவான அல் ஷபாப் அந்த பகுதியை ஆக்கிரமித்துவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பயந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக சோமாலியாவில் உள்ள முக்கிய ராணுவ தளத்திலிருந்து எத்தியோப்பியர்கள் வெளியேறி உள்ளனர்.

எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தை தடுக்க இந்த படையினர் தேவைப்படுவதாக கருதப்படுகிறது.

இதுதவிர, சோமாலியாவில் உள்ள எத்தியோபிய படையினருக்குள் உட்பூசல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்