தென் ஆஃப்ரிக்கா அதிபரை பதவி விலக கோரி ஆளும் கட்சியின் தலைமை கொறடா வலியுறுத்தல்

தென் ஆஃப்ரிக்காவில் ஆளும் ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா, அதிபர் ஜேகப் ஜூமா உட்பட கட்சித் தலைமை பொறுப்பில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் ஜேகப் ஜூமா

நிதியமைச்சர் பிரவின் கோர்தனுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அரசியல் ரீதியாக தூண்டப்பட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும் என்று ஜேக்சன் தெம்பு விவரித்துள்ளார்.

இனவெறி அரசாங்கத்தைவிட மிக மோசமாக ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் நடந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீப மாதங்களில், ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் விரிசல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

நிதியமைச்சர் கோர்தனுக்கு துணை அதிபர் சிரில் ரமாபோசே தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஜூமாவின் ஆதரவாளர்களால் கோர்தனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்..

தொடர்புடைய தலைப்புகள்