ஏமனில் மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடக்கம்

ஏமனில் அமல்படுத்தப்பட்ட மூன்று நாள் போர் நிறுத்தம் முடிவடைந்த சில மணி நேரங்களில், செளதி அரேபியா தலைமையிலான கூட்டணி, ஏமன் தலைநகரான சனாவில் வான்வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசை எதிர்த்து போராடி வரும் ஹூதி போராளிகளின் நிலைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் வேட்டை அதிகாலை வேளையில் நடந்தது.

மூன்று நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட இந்தப் போர் நிறுத்த உடன்பாடு, இது வரை யாரும் அணுக இயலாத பகுதிகளாக இருந்த பல இடங்களில் உணவு விநியோகம் மற்றும் உதவிகள் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையை அனுமதித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், இந்தப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், இந்தப் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது பயனற்றது என்று கூறியுள்ள ஏமனின் வெளியுறவு அமைச்சர், போர் நிறுத்த உடன்பாட்டினை மதிப்பதில் ஹூதி போராளிகள் உறுதியாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்