முடிவுக்கு வந்தது ஸ்பெயினில் பத்து மாதங்கள் நீடித்த அரசியல் முடக்கம்

கன்சர்வேடிவ் கட்சியின் மரியானோ ரஜோயை பிரதமர் பதவி ஏற்க அனுமதித்து, பத்து மாதங்கள் நீடித்த அரசியல் முடக்கத்தை ஸ்பெயினின் முக்கிய எதிர்க்கட்சியான சோசலிசக் கட்சியின் தலைமை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தில் எதற்கும் ஆதரவு பெற முடியாமல் போகும் என்று சோசலிசக் கட்சியினர் தெரிவிப்பு

ரஜோய் முன்வைத்த சிறுபான்மையினர் அரசு மீது பயன்படுத்திய வெட்டு அதிகாரத்தை அகற்றிவிட ஆளும் சோசலிசக் கவுன்சில் வாக்களித்திருக்கிறது.

கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் சோசலிசக் கட்சியினரும், ரஜோயின் கட்சியும் பெரும்பான்மை பெற முடியவில்லை.

கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதிலும் அவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

ஒரு சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தில் எதற்கும் ஆதரவு பெற முடியாமல் போகும் என்று சோசலிசக் கட்சியினர் தொடர்ந்து கூறிவந்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்