கனடாவோடு வர்த்தக ஒப்பந்தம்: ஆதரவளிக்க பெல்ஜிய வலோனியா பிராந்தியத்துக்கு காலக்கெடு

ஐரோப்பிய ஒன்றியம் கனடாவோடு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவதை பெல்ஜியத்தின் வலோனியா பிராந்திய அரசு ஏற்றுக்கொள்ள திங்கள்கிழமை மாலை வரை ஐரோப்பிய ஒன்றியம் அவகாசம் வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption முடிவு ஐரோப்பாவிடம் தான் உள்ளது என்பதை கனடாவின் கிறைஸ்டியா ஃபிரிலான்டும், மார்ட்டின் சூல்ஸூம் ஒப்புகொண்டுள்ளனர்

பெல்ஜியம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை, வலோனிய பிராந்திய அரசு இன்னும் தடுக்குமானால், கனடாவோடு வியாழக்கிழமை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ள உச்சி மாநாடு ரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரஸல்ஸில் அவசர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கும் நிலையிலும், கையெழுத்திடும் நிகழ்வில் பிரதமர் ஜஸ்டின் டுர்ரூடோ கலந்து கொள்வதை கணடா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சிஇடிஏ என்று அறியப்படும் இந்த ஒப்பந்தம், வட அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் பெல்ஜியத்தின் தெற்கு பகுதியில் குவிக்கப்படுவதை அனுமதிக்கும் என்பதில் வலோனிய பிராந்திய அரசு கவலை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்