ஐரோப்பிய ஒன்றிய சட்ட திட்டங்களை கேள்விக்குள்ளாக்கும் இத்தாலி

அகதிகள் நெருக்கடி மற்றும் நிலநடுக்கத்திற்கு பிந்தைய நிலைமையை இத்தாலி கையாளும் வகையில் விதிமுறைகள் சற்று நெகிழ்வாக அமைய வேண்டும் என்று கூறி, இத்தாலிய நிதி அமைச்சர் பியர் கார்லோ பாதுவான் ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு திட்டத்தின் சட்ட திட்டங்களை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption குடியேறிகள் பிரச்சனையை கையாள பில்லியன் கணக்கான தொகையை இத்தாலி செலவிட்டுள்ளது

இத்தாலி அரசின் அடுத்த ஆண்டுக்கான நிதி திட்டங்களை பரிசீலித்து வருகின்ற ஐரோப்பிய ஆணையம் அதனை கேள்விக்குள்ளாக்கலாம்.

இந்த கண்டத்திற்கே ஒரு பிரச்சனையாக இருக்கும் குடியேறிகள் பிரச்சனையை கையாள பில்லியன் கணக்கான தொகையை இத்தாலி செலவிட்டுள்ளதாக பாதுவான் கூறியிருக்கிறார்.

இதற்கு மாற்று செயல்பாடு ஹங்கேரிய அணுகுமுறை போன்று தடுப்பு சுவர்களை கட்டுவதாகும்.

எந்த தெரிவை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்