பிரான்ஸ்: கலே முகாமில் உள்ள குடியேறிகளை இடமாற்றும் பணி தொடங்க உள்ளது

பிரான்சில் 1,200க்கும் மேற்பட்ட போலிசார் மற்றும் அதிகாரிகள், கலே துறைமுகத்தில் உள்ள குடியேறிகள் முகாமிலிருந்து ஆயிரக்கணக்கானோரை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரான்ஸ்: கலே முகாமில் உள்ள குடியேறிகளை இடமாற்றும் பணி தொடங்க உள்ளது

குடியேறிகள் பேருந்துகள் மூலம் நாடு முழுவதும் உள்ள வரவேற்பு மையங்களுக்கு அழைத்து செல்லப்படுவாரகள். அங்கு அவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கலாம்.

கலே முகாமிலிருந்து அகற்றப்படுவதற்கு பதிலாக நாங்கள் தெருக்களில் படுத்து உறங்கலாம் என்று சில குடியேறிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காடு என்றழைப்பட்ட இந்த முகாம் சுமார் 8,000 பேருக்கு வீடாக இருந்தது.

காடு என்றழைப்பட்ட இந்த முகாம் சுமார் 8,000 பேருக்கு வீடாக இருந்தது.

இவர்களை அனைவரும் பிரிட்டனை அடைய வேண்டும் என்று நினைத்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த வார இறுதியில், போலிஸ் மற்றும் சில குடியேறிகள் குழுக்கள் இடையே மோதல் வெடித்திருந்தது.

ஆனால், அந்த பகுதியிலிருந்து அவர்களை அகற்றிவிட்டு, இந்த வாரத்தில் முகாமை இடித்து தள்ள பிரெஞ்சு அதிகாரிகள் நினைக்கின்றனர்.

கடந்த வார இறுதியில், போலிஸ் மற்றும் சில குடியேறிகள் குழுக்கள் இடையே மோதல் வெடித்திருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்