துருக்கியில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் சிரியா அகதி குழந்தைகள்

துருக்கியில் உள்ள ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சிரியா அகதிக் குழந்தைகள் சட்ட விரோதமாக பணியமர்த்தப்பட்டு வருவதாக பிபிசி நடத்திய ரகசிய விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துருக்கியில் உள்ள ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் சிரியா அகதி குழந்தைகள்

பணி செய்வதற்கான முறையான அனுமதியின்றி பதின்ம வயதினர் சிலர், அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நேரத்தை தாண்டி வேலை செய்து வருகின்றனர் என்பதை 'பனோரமா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக செயல்படும் பிபிசி குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நேரத்தை தாண்டி வேலை செய்து வருகின்றனர்

அப்படி வேலை செய்தவர்களில் 15 வயதுடையவரும் ஒருவர்.

மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் என்ற பிரிட்டிஷ் ஆடை நிறுவனத்திற்கும், ஏ.எஸ்.ஒ.எஸ் என்ற இணையவழி வர்த்தக நிறுவனத்திற்கும் இந்த பதின்ம வயது பணியாளர்கள் ஆடைகளை தயாரித்து வந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் என்ற பிரிட்டிஷ் ஆடை நிறுவனத்திற்கும், ஏ.எஸ்.ஒ.எஸ் என்ற இணையவழி வர்த்தக நிறுவனத்திற்கும் இந்த பதின்ம வயது பணியாளர்கள் ஆடைகளை தயாரித்து வந்துள்ளனர்.

இதில் ஏ.எஸ்.ஒ.எஸ் நிறுவனமானது இதுதொடர்பான நடத்தை விதி ஒன்றை கொண்டுள்ளது.

தன்னுடைய விநியோகஸ்தர்களிடம், 16 வயதுக்குட்பட்டவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்களா என்பதை தெரிவிக்கக்கோரி கூறியிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்துவது அல்லது சுரண்டலைப் பொறுத்து கொள்ள முடியாது என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

மேலும், உற்பத்தி பகுதிகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்கவும் கோரியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்துவது அல்லது சுரண்டலைப் பொறுத்து கொள்ள முடியாது என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்