ரொட்ரிகோவின் போதை எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஆசியாவுக்கான மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கருத்து

பிலிப்பைன்ஸில் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே போதைப் பொருள் எதிராக தொடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா வெளியிட்டிருந்த கவலைகளை ஆசியாவுக்கான மூத்த அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்காவின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரங்களின் துணை செயலர் டேனியல் ரஸல்

உயிர்களின் இழப்பு என்பது ஒரு நேர்மறையான போக்கு அல்ல என்றும், இது மோசமான வணிகத்துக்கு வழிவகுக்கும் என்றும் அமெரிக்காவின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரங்களின் துணை செயலர் டேனியல் ரஸல் கருத்து தெரிவித்துள்ளார்.

மணிலாவில் டுடெர்டே சந்தித்த பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், போதை பொருட்களுக்கு எதிரான சாட்டை அடி முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது என்றும் கூறினார்.

கடந்த மே மாதத்தில், பிலிப்பைன்ஸின் அதிபராக டுடெர்டே பொறுப்பேற்றதிலிருந்து, போதை மருந்து எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கைகளில் சுமார் 3,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்