வியட்நாமில் போதை மருந்து மறுவாழ்வு மையத்திலிருந்து 200 பேர் தப்பியோட்டம்

ஞாயிற்றுக்கிழமை இரவு போதை மருந்துக்கு அடிமையானோர் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்றுவிட்ட 200-க்கு மேற்பட்டோரை வியட்நாமின் தெற்கு பகுதி காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 500-க்கு மேற்பட்டோர் தப்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது

தீயணைப்பான் மற்றும் தடிகளை பயன்படுத்தி கான்கிரிட் சுவர்களையும், சன்னல்களையும் உடைத்து, அந்த மறுவாழ்வு மையத்தில் இருந்த 500-க்கு மேற்பட்டோர் தப்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூவாசிகள் வீட்டிலேயே இருக்கவும், வீடுகளை பூட்டி வைத்திருக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த மறுவாழ்வு மையத்தில் சுமார் 1500 பேர் இருக்கின்றனர்

அதிகமானோர் அவ்வப்போது தப்பிவிடுகின்ற வியட்நாமில் இருக்கும் இத்தகைய மறுவாழ்வு மையங்களில் காணப்படும் மோசமான வசதிகளை மனித உரிமைகள் குழுக்கள் விமர்சித்து வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்