மனிதநேய நெருக்கடியை கண்டுகொள்ளவில்லை - வெனிசுவேலா அரசு மீது குற்றச்சாட்டு

நாட்டின் மனிதநேய நெருக்கடியை கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெனிசுவேலா அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அதிபர் மாதுரோ சர்வாதிகாரியாக செயல்படுவதாக எதிரணி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்

உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை, அதற்கான காரணங்களுக்கு தீர்வு காண சோசலிச அரசு மறுப்பதாலும், அரசியல் எதிர்ப்பாளர்களை அரசு மிரட்டுவதாலும், தீவிரமடைந்திருப்பதாக அந்த அமைப்பின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

பிரச்சனைகளின் அளவை தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வருவதாக அதிபர் நிக்கோலாஸ் மாதுரோவை ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் விமர்சித்துள்ளது.

அதிபரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தடுத்துவிட்டதன் மூலம், அதிபர் ஒரு அதிரடி ஆட்சி மாற்றத்தையே நிகழ்த்திவிட்டதாக எதிர்கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்றம் அதிபர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்