மால்டாவில் இலகுரக விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 5 பேர் பலி

மால்டாவில் இலகுரக விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மால்டாவில் இலகுரக விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 5 பேர் பலி

சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், அந்த விமானம் வானில் தலைகீழாக சுற்றியபடி, தீ பந்தை போல பறந்து சிதைந்து விமான தளத்தின் புற எல்லைக்குள் விழுந்து நொறுங்கியது.

இந்த விமான விபத்தில் பலியானவர்களில் இருவர் தனியார் ஒப்பந்தகாரர்கள் என்றும், மூவர் அமைச்சக அதிகாரிகள் என்றும் பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜீன் யுவ்ஸ் லி டிரியன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய தரைக்கடல் மீது இந்த விமானம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

போதை பொருள் கடத்தலுக்கு எதிராக இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்