கென்யாவில் தாக்குதல் நடத்தியது அல்-ஷபாப் இயக்கத்தினரா?

சோமாலியாவைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அண்டை நாடான கென்யாவில் நடத்தியுள்ள தாக்குதலில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கென்யத் தாக்குதலில் 12 போர் கொலை ( அல் ஷபாப் இயக்கத்தினர் கோப்புப்படம்)

அல் -ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் தாக்குதல்தாரிகள், கென்யாவின் எல்லை நகரமான மன்டேராவில் நேற்றிரவு முழுவதும் நடந்த தாக்குதலில் வெடிபொருட்களை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கென்யாவின் வட கிழக்கு நகரமான மன்டேராவில் உள்ள ஒரு விடுதி இல்லம், இந்த தாக்குதலில் முக்கிய இலக்காக இருந்துள்ளதாக தோன்றுகிறது.