ஆஸ்திரேலிய பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து: நீர் சவாரி மேற்கொண்ட நால்வர் மரணம்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Jason O'Brien/Getty Images
Image caption விபத்து ஏற்பட்ட பொழுதுபோக்கு பூங்கா

ட்ரீம்வேர்ல்ட் என்றழைக்கப்படும் இந்தப் பொழுதுபோக்கு பூங்காவின் பேச்சாளர் ஒருவர், இது குறித்து கூறுகையில், இந்த விபத்து குறித்த முழுத் தகவல்கள் மற்றும் உண்மைகளை பெற அவசரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் இணைந்து தாங்கள் செயல்படுவதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Jason O'Brien/Getty Images
Image caption விபத்து ஏற்பட்ட ட்ரீம்வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா

நீர் கேளிக்கை விளையாட்டான தண்டர் ரிவர் ரேபிட்டிஸ் ரைட் எனப்படும் ஆற்றில் விரைவாக நீர் சவாரி செய்யும் பிரிவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மக்கள் கேளிக்கை பயணம் மேற்கொள்ளும் இந்த நீர் சவாரி, வேகமாக செல்லும் செயற்கை ஆற்றுடன் சேர்ந்து செல்லும் வட்ட வடிவிலான மிதவைகளை கொண்டது.

தொடர்புடைய தலைப்புகள்