கடல் கடந்த குடியேறிகளின் மிக கடுமையான ஆண்டு 2016

ஐரோப்பாவை வந்தடைய மத்தியதரைக் கடலை கடந்து செல்லும் குடியேறிகளுக்கு, 2016ம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக இருக்கப் போவதாக ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption லிபியாவுக்கும், இத்தாலிக்கும் இடையில் காணப்படும் ஆபத்தான கடல் வழிப்பாதையில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கின்றனர்.

மிகவும் ஆபத்தான இந்த கடல்வழியை கடந்து வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்ற நிலையில், ஜனவரி மாதம் தொடங்கி 3 ஆயிரத்து 700 பேர் பலியாகி இருப்பதாக இது கூறியிருக்கிறது.

கடலை கடந்து வருவோரின் உண்மையான எண்ணிக்கை குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆனால், பலியாவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கின்றன.

ஆபத்தான பாதைகளை பயன்படுத்துதல், மோசமான வானிலைகளின்போது கடலை கடப்பது மற்றும் மக்களை கடத்துவோரால் கையாளப்படும் புதிய உத்திகள் ஆகியவற்றால் மக்கள் கடலில் மூழ்குவதாக அது தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்