ஹீத்ரோ விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும்

ஐரோப்பாவில் ஏற்கெனவே அதிக விமானப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில், புதிய ஓடுதளத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புதிய ஓடுதளம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக வழக்குகளும் தொடரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

விமான நிலையத்தை விரிவாக்குவதில், போட்டியாளரும், தன்னை விட சிறியதுமான காட்விக் விமான நிலையத்தோடு, ஹீத்ரோ போட்டியிட்டு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஜூன் மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து, பிரிட்டன் இன்னும் வர்த்தகத்திற்கு தயாராக இருப்பதை காட்டும் தெளிவான அறிகுறியாக இந்த அறிவிப்பு இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் கிரிஸ் கிரேலிங் தெரிவித்திருக்கிறார்.

லண்டன் முழுமையும் இருக்கும் காற்று தரத்தை சீர்குலைப்பதாக இந்த திட்டம் அமையும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த திட்டம் காற்று தரத்தை சீர்குலைப்பதாக அமையும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவிப்பு

ஹீத்ரோ விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுதளம் செயல்படுத்த முடியாதது என்று சாதிக் கானுக்கு முன்னர் மேயராக இருந்தவரும், தற்போதைய வெளியுறவு அமைச்சருமான போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார்.

இந்த முன்மொழிவுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓராண்டுக்குள் வாக்களிக்க இருக்கின்றனர். புதிய ஓடுதளம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக வழக்குகளும் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.