ஆர்ஜெண்டினா ராணுவ ஆட்சி குறித்த கத்தோலிக்க தேவாலய ஆவணங்கள் திறக்கப்படும் என வாடிகன் உறுதி

ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற ராணுவ ஆட்சி தொடர்பாக, அதிகாரபூர்வ கத்தோலிக்க தேவாவலய ஆவணங்களை திறக்க ஆயுத்தமாகி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அதனை காணும் வகையில் செய்யப்போவதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அறிவிப்பு வெளியான போது

அதனால் உண்மை, நீதி மற்றும் அமைதி என்று வாடிகனால் விவரிக்கப்படுபவற்றின் சேவையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று வாடிகன் தெரிவித்துள்ளது.

ஆர்ஜென்டினாவில் 1976ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அழுக்கு போர் என்று அறியப்பட்ட போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியும், கொல்லப்பட்டும் அல்லது காணாமலும் போயினர்.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் கத்தோலிக்க தேவாலயங்கள் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தன என குற்றம் சுமத்தியுள்ளனர்.

ராணுவ ஆட்சியின் போது ஆர்ஜென்டினாவில் கத்தோலிக்க திருச்சபையின் மூத்த நபராக இருந்த போப் ஃபிரான்ஸிஸ் ஆவணங்கள் வெளியிடப்படும் என உறுதியளித்துள்ளார்,

தொடர்புடைய தலைப்புகள்