வருவாயில் முதல் சரிவை அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் 2001 ல் இருந்து தனது ஆண்டு வருவாயில் ஏற்பட்ட அதன் முதல் சரிவை அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

முந்தைய இரண்டு காலாண்டுகளில் உள்ள போக்கை, அமெரிக்க நிதியாண்டில், கடந்த காலாண்டின் முடிவுகள் உறுதிப்படுத்தின. வருவாய் ஒன்பது சதவீதிற்கும் குறைவானதாக இருந்தது.

வளரும் சந்தை என்று பார்க்கப்பட்ட, சீனாவில் இருந்து வரும் வருமானம் இதை விடப் பெரிய அளவிலான சதவீதத்தில் சரிந்தது.

கடந்த ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், கடந்த மூன்று மாத காலத்தில், லாபமும் 19 சதவீத அளவில் குறைந்தது.

இந்த நிலை ஏற்படுவது , ஸ்மார்ட் போன் சந்தையின் நிறைவுற்ற நிலையின் ஒரு அறிகுறி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஐபோன் -7 அறிமுகத்திற்கு பிறகு, கடைசி காலாண்டு முடிவுற்றது. எனவே, அந்த புதிய மாடலின் விற்பனை முடிவுகள் முழுமையாக சமீபத்திய புள்ளிவிவரங்களில் இணைக்கப்பட்டவில்லை என்று தெரிகிறது.